இலங்கையை பிறிதொரு காலணியாக்க வேண்டாம்- சீனா இந்தியாவுக்கு எச்சரிக்கை
உலக பிரபலம் வாய்ந்த போஃப்ஸ் சஞ்சிகையில் உள்ள கட்டுரையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளின் பின்னர் சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
சீனாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பில் இந்தியா தொடர்ச்சியாக கடும் எச்சரிக்கையுடம் செயற்படுவதாக அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக அண்மைக் காலங்களில் பலவாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.
சீன அரசாங்கத்தின் முதலீட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகமும் உள்ளடக்கப்பட்டுள்ள தெற்கு அபிவிருத்தி திட்டமும் இதனூடாகவே வெளிப்படுத்தப்படுகிறது.
எதிர்வரும் ஐந்து வருட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.