சீனாவின் ஏவுகணையால் இந்தியா, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

கடந்த வாரம் 10 அணு குண்டுகள் ஏவக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியது.
தற்போது மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய அளவிலான நவீன ஏவுகணையுடன் போர்ப் பயிற்சி நடத்தியுள்ளது.
இந்த போர் பயிற்சி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
அண்மை காலமாக தென்சீனக் கடல் எல்லையில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை சீன ராணுவம் சந்தித்து வந்தது.
இந்த ரக ஏவுகணைகள் 1,000 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக சென்று துல்லியமாக இலக்கை தாக்கும் வல்லமை கொண்டுள்ளன.
இந்த ஏவுகணைகளால் சில டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் சுமந்து செல்ல முடியும்.
டி.எப். 16 ஏவுகணை தன்னிடம் இருப்பதாக சீனா 2015-ம் ஆண்டு முதன்முதலாக அறிவித்தது.
அதன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வடிவம்தான் தற்போது பொதுமக்களிடம் வீடியோ காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த புதிய ரக ஏவுகணையால் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.