கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த மூவர் கைது

(இஹ்ஸானா- பரீத்)
கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 17,20,மற்றும் 21வயதுடைய மூவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் கந்தளாய் பேராறு பகுதியிலுள்ள சில்லரைக் கடையொன்றினை உடைத்து அதிலிருந்த மாவு மூடைகள், அரிசி மூடைகள் மற்றும் பால்மா வகைகள்,அலைபேசிக்கான மீள்நிரப்பு அட்டைகள் போன்றவற்றினையும் திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலும் ,குறித்த திருட்டுப் பொருட்களுடனும் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பேராறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) இரவு ஒரே நேரத்தில் தி/ஆயீஷா மகளீர் மகா வித்தியாலயத்திலும் கதவுகளை உடைத்து உண்டியல்களையும், திருடியுள்ளதாகவும்,பள்ளிவாயல் ஒன்றிலும் உண்டியல்களை திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு இன்று (7) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.