இந்தியாவில் இருந்து பஸ் ஓட்டுநர்களை இறக்குமதி செய்ய தீர்மானம் ! முள்ளிநியூஸ்

இந்தியாவில் இருந்து பஸ் ஓட்டுநர்களை இறக்குமதி செய்ய தீர்மானம் !


இலங்கையில் தனியார் பஸ் ஓட்டுநர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் இருந்து பஸ் ஓட்டுநர்களை அழைத்துவருவதே அதற்கான தீர்வு எனவும் தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இலங்கையில் உள்ள பஸ் சாரதிகள் இங்கு சேவை புரிய விருப்பமில்லாத நிலை தோன்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் வெளிநாட்டு தொழில்களில் நாட்டம் செலுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பஸ் ஓட்டுநர் ஒருவர் 2000 - 3000 ரூபா வரை நாள் சம்பளம் கோருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் அதனை சில பஸ் உரிமையாளர்களால் ஈடு செய்ய முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW