மழை பெய்யாவிட்டாலும் 60 சூரிய மின்கலங்களை பாவித்து தடையற்ற மின்சாரத்தை வழங்குவோம். முள்ளிநியூஸ்

மழை பெய்யாவிட்டாலும் 60 சூரிய மின்கலங்களை பாவித்து தடையற்ற மின்சாரத்தை வழங்குவோம்.


எல்லா காலப்பகுதியிலும் தடையின்றி மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும்
வகையில், சூரிய மின்கலங்களைப் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மழை பெய்தபோதும் நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் 34 சதவீதமாக தாழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் தற்போது சக்திவலு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும், எல்லா காலப்பகுதியிலும் தடையின்றி மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில், நாடளாவிய ரீதியில் 60 சூரிய மின்கலங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW