இஸ்லாம் கூறும் விடயம், எனக்கு நன்கு தெரியும் - மஹிந்த முள்ளிநியூஸ்

இஸ்லாம் கூறும் விடயம், எனக்கு நன்கு தெரியும் - மஹிந்த


என்­னுடன் இருந்த ஓரி­ருவர் செய்த தவறின் கார­ணத்­தினால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னரும் என் மீது வெறுப்­புக்­குள்­ளா­னார்கள். அதன் பிர­தி­பலனே 2015 ஜன­வரி 8 ஆம் திகதி நடந்த தேர்­த­லிலும் ஆகஸ்டில் பொதுத் தேர்­த­லிலும் அடைந்த தோல்வி என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் கூட்­ட­மொன்று குரு­நாகல் மல்­ல­வப்­பிட்­டி­யவில் முன்னாள் குரு­நாகல் பிர­தேச சபை உறுப்­பினர் அமானின் ஏற்­பாட்டில் முன்­ன­ணியின் தேசிய அமைப்­பாளர் அப்துல் சத்தார் தலை­மையில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசு­கையில்,

இன்று இலங்கை மக்கள் 69 ஆவது சுதந்­திர தினத்தை மிகவும் மன­வ­ருத்தத்­துடன் கடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நாட்டின் சுதந்­தி­ரத்தை சிங்­க­ளவர் மட்­டு­மல்ல, முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் மற்றும் ஏனைய சமூ­கத்­தி­னர்­களும் சேர்ந்துதான் பெற்­றார்கள்.

இவற்றை நாங்கள் மறக்க முடி­யாது. இன்று இரவில் சுதந்­தி­ர­மாக கூட்­டத்தை நாங்கள் நடத்திக் கொண்டு இருக்­கின்றோம். நாட்டில் பயங்­க­ர­வாதம் இருந்தால் இப்­ப­டி­யான கூட்­டத்தை நடத்த முடி­யுமா? இந்த நாட்டில் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு சிங்­கள இனத்­தவர் மட்டும் உயிர்த் தியாகம் செய்­ய­வில்லை. பங்­க­ளிப்பு செய்த முஸ்­லிம்­க­ளையும் ஏனை­யோ­ரையும் மறக்க முடி­யாது.

நாங்கள் நடத்­திய போராட்டம் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கவோ ஏனை­யோர்­க­ளுக்கு எதி­ரா­னதோ அல்ல. அது பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­ன­தாகும். இன்று அதைவிட மிகவும் மேலா­ன­தொரு யுத்தம் செய்ய வேண்டி இருக்­கி­றது. அந்த யுத்தம் மக்­களின் பட்­டி­னிக்கு எதி­ரான யுத்­த­மாகும்.

எமது நாட்டில் என்­னு­டைய ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்கள் பொரு­ளா­தார ரீதியில் மிகவும் சந்­தோ­ச­மாக இருந்­தார்கள். இன்று இந்த நாட்டில் சிங்­க­ள­வர்­க­ளு­டைய பொரு­ளா­தாரம் மட்­டு­மல்ல, முஸ்­லிம்­க­ளு­டைய வியா­பா­ரங்­களும் வீழ்ச்சி கண்­டுள்­ளன.

அத்­துடன், சூழ்ச்­சி­க­ர­மான முறையில் முஸ்­லிம்­களை என்­னி­ட­மி­ருந்து பிரித்­தார்கள். என்­னோடு இருந்த ஓரி­ருவர் செய்த தவறின் கார­ணத்­தினால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் வெறுப்­புக்கு உள்­ளா­கினேன். அதன் பிர­தி­ப­லன்தான் ஜன­வரி 8 ஆம் திகதி நடந்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பின்­ன­ரான பொதுத் தேர்­த­லிலும் அடைந்த தோல்வி.

எனக்கு இஸ்லாம் கூறும் விடயம் நன்கு தெரியும். அசத்­தியம் நிச்­ச­ய­மற்­றது .

ஒரு நாளைக்கு நிச்­சயம் சத்­தியம் வெல்லும் என்­பதை நான் அறிந்­துள்ளேன். என் முன்னால் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் மக்கள் திரண்டு வந்து நிற்­பதைப் பார்க்கும் போது இன்று சத்­தியம் உண்மை வெல்­லப்­பட்­ட­தாக நான் உணர்­கின்றேன்.

என்­னு­டைய எதிர்­கால ஆட்­சியில் இந்த நாட்டு முஸ்­லிம்­க­ளையும் ஏனைய சமூ­கங்­க­ளையும் இந்த நாட்டில் ஒரு கௌர­வ­மான பிர­ஜை­க­ளாக வாழ்­வ­தற்­கு­ரிய சூழலும் சுபிட்­சமும் நிரந்­த­ர­மாக வழங்­கப்­படும் என்­பதை உறு­தி­படத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW