மின் ‘வெட்டைத்’ தவிர்க்க அஜித் பெரேராவின் எச்சரிக்கை! முள்ளிநியூஸ்

மின் ‘வெட்டைத்’ தவிர்க்க அஜித் பெரேராவின் எச்சரிக்கை!


நாட்டில் வரட்சி நீடிக்கும் நிலையில் இது குறித்து மக்கள் அவதானமில்லாமல் இருப்பதாகவும் மின் விநியோகம் தொடர வேண்டுமானால் பொறுப்புடன் பாவித்து சேமிக்க ஒத்துழைக்க வேண்டும் என எச்சரிக்கை கலந்த வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதியமைச்சர் அஜித் பெரேரா.

மேல் மாகாணத்திலேயே 60 வீத மின் பாவனையிருப்பதாகவும் தெரிவித்துள்ள பிரதியமைச்சர் இப்போதிருந்தே பொறுப்புடன் சேமிக்க ஆரம்பிக்கா விட்டால் மின் வெட்டு தவிர்க்க முடியாத ஒன்றாகும் எனவும் இதனால் பொது மக்கள் தேவைகளைக் குறைத்து மின் பாவனையையும் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW