வெலிகடை தாக்குதல்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு! முள்ளிநியூஸ்

வெலிகடை தாக்குதல்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!


மஹிந்த ராஜபக்ச அரசில் வெலிகடை சிறைச்சாலையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோரது நெருங்கிய உறவினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு தலா 1 லட்ச ரூபாவும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 27 பேர் உயிரழந்து, நாற்பது பேர் காயமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இது குறித்து ஆராய 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட குழு தற்போது இறுதி அறிக்கையை ஒப்படைத்துள்ளது.

இதன் பின்னணியிலேயே சம்பவத்தைக் கண்டித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இழப்பீட்டையும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW