சண்டியனுக்கு சண்டியன்; மன்னிப்பு இல்லை: ரஞ்சன்
நாட்டில் இருந்த மிகப் பெரிய சண்டியனை 2015 ஜனவரி 8ம் திகதி விரட்டியுள்ள நிலையில் இப்போது உருவாகியிருக்கும் எந்தக் சண்டியர்களுக்கும் அச்சப்பட போவதில்லையென தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
திவுலுபிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் அரசாங்கமும் பிரதேச செயலாளரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருப்பது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அவர் பிரதேச செயலாளருடன் முரண்பட்டுள்ள நிலையில் ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோர வேண்டும் என தொழிற்சங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்தவின் ஆளுமையிலேயே இவ்வாறு இடம்பெறுகின்ற நிலையில் அது குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறுபவர்கள் வேண்டுமானால் அச்சப்படலாம் ஆனால் தான் அச்சப் படப் போவதில்லையென தெரிவித்துள்ள ரஞ்சன், தான் ஒரு போதும் மன்னிப்புக் கோரப் போவதில்லையெனவும் அவர்கள் சண்டியர்கள் என்றால் தானும் சண்டியனே எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.