ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர் – பைசர் முஸ்தபா குற்றச்சாட்டு முள்ளிநியூஸ்

ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர் – பைசர் முஸ்தபா குற்றச்சாட்டு


நல்லாட்சி அரசாங்கத்தினுள் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் பக்கச்சார்பாக செயற்படுவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா குற்றம் சாட்டியுள்ளார்.

பீ.பீ.சி. சிங்கள சேவைக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா,

நல்லாட்சி அரசாங்கத்தினுள் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அர்ப்பணிப்பான முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எங்களிடம் கட்சி பேதங்கள் இல்லை.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் தங்கள் சேவைகளின் போது சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களைப் புறக்கணித்து நடந்து கொள்ளத் தலைப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக எங்கள் மீது சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் அதிருப்தியடையத் தொடங்கியுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்களை மனதில் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்,

இது அரசாங்கத்தினுள் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW