கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலக வீரர்கள் வெற்றி

இச் சுற்றுப் போட்டி தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி ஜெய கௌரி தலைமையில் தம்பலகாமம் ஈச்ச நகர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதேச செயலாளர் அலுவலக வீரர்கள், பிரதேச சபை அலுவலக வீரர்கள், தம்பலகாமம் பொலிஸ் பிரிவு வீரர்கள், ஜெமுனு புற இராணுவ வீரர்கள் என நான்கு கழகங்கள் பங்கு பற்றியிருந்தனர்.
05 ஓவர் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் 11 பேர்கள் விளையாடினார்கள்.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் அலுவலக வீரர்கள் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.




