குடும்ப பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு. முள்ளிநியூஸ்

குடும்ப பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.


சங்கத்தாணை சாவகச்சேரி பகுதியில் குடும்ப பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக நேற்று(12) மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியினை சேர்ந்த யோகநாதன் ஸ்ரீகலா வயது(57) என்பவரே எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குடும்ப பிரச்சிணை காரணமாக அவர் தனக்கு தானே மண்ணெனை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் தீயில் எரிந்து கருகிய நிலையில் சடலத்தினை மீட்டனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW