ஊழல் ‘அமைச்சர்களை’ மாற்ற நடவடிக்கை?
ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள அமைச்சர்கள் சிலரை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் எதிர்வரும் சில நாட்களுக்குள் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் தேர்தலுக்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் வரும் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.