வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கக் கோரிக்கை
வில்பத்து வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாக நிலவி வரும் தொடர் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா.
அரசாங்கம் இது தொடர்பில் பராமுகமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள அவர் இது தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பெற்று ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் இதற்கான தீர்வைக் காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.