பாதுகாப்பு படைகளில் 1500 பேர் கைது.!
பாதுகாப்பு படைகளில் இருந்து உத்தியோக பூர்வ விடுமுறை இன்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினர் 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இனிமேல் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படமாட்டது எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான சேவை விலக்கு பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பர் 01ம் திகதி அமுல்படுத்தப்பட்ட அதேவேளை டிசம்பர் மாதம் 31ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. அந்த தினத்தில் இருந்து இன்று வரையில் முப்படைகளை சேர்ந்த 1500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் இராணுவத்தை சேர்ந்த 3 உயர் அதிகாரிகளும் 1149 சாதாரண படை பிரிவினரும், கடற்படையை சேர்ந்த 327 படையினரும், விமானப்படையை சேர்ந்த 21 படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து குறித்த காலஎல்லை வரையில் உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத சுமார் 9000 முப்படையின் வீரர்கள் சட்டரீதியாக சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை பெற்றுள்ளனர். குறித்த இக்காலத்தினை பயன்படுத்தி இலங்கை இராணுவத்திலிருந்து 11 அதிகாரிகள் மற்றும் 7812 இராணுவ வீரர்களும், விமானப்படையிலிருந்து 21 அதிகாரிகள் மற்றும் 312 விமானப்படை வீரர்களும், கடற்படையிலிருந்து 2 அதிகாரிகள் மற்றும் 709 கடற்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக விலகிச் செல்லவதற்கான அனுமதியினை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இனிமேல் பொதுமனிப்புக் காலம் வழங்கப்படுவது தொடர்பில் பாதுகாப்பு படை தீர்மானிக்கவில்லை எனவும் கைதுசெய்யப்படும் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW