45வது நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்! முள்ளிநியூஸ்

45வது நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்!



இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தனது சேவையில் இருந்து கடந்த 28 ஆம் திகதி ஓய்வுப் பெற்றார்.

இதையடுத்து, அடுத்த பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப்பின் பெயரை அரசியல் அமைப்பு பேரவை பரிந்துரை செய்திருந்தது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW