தொடரும் ‘பாதாள’ உலக சண்டை: கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்கள்! முள்ளிநியூஸ்

தொடரும் ‘பாதாள’ உலக சண்டை: கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்கள்!



கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்துக்குள் தாக்குதலுக்குத் தயாரான நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

களுத்துறை சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதன் விளைவாக இன்று இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் பாதாள உலக பேர்வழி ரொஹா என்றழைக்கப்படும் ஹெரல்ட் ரொஹான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்ததாகவும் குறித்த நபரைத் தாக்குவதற்கே இவ்வாயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW