இலங்கைக்கான கட்டார் தூதுவராக மஹிந்த ராஜபக்சவின் சகா முள்ளிநியூஸ்

இலங்கைக்கான கட்டார் தூதுவராக மஹிந்த ராஜபக்சவின் சகா



இலங்கைக்கான கட்டார் தூதுவராக வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது நியமனக் கடிதத்தை வர்த்தகர் லியனகே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நேற்று(10) உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தொழில் கட்சித் தலைவரான சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும், அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (tw)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW