நாட்டில் மூன்று வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது: சுகாதார அமைச்சு

நாட்டில் தற்போது டெங்கு உள்ளிட்ட 3 வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் இந்த காய்ச்சல் குறித்து பெற்றோர் அவதானமாக செயற்பட வேண்டும் என சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.
டெங்கு காய்ச்சலைப் போன்று வைரஸ் காய்ச்சலும் குழந்தைகளுக்கு பரவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மூன்று நாட்களுக்கு அதிகமாக காய்ச்சல் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.