மக்கள் ‘வழி’ தவறிவிட்டார்கள்: கோத்தா விசனம்! முள்ளிநியூஸ்

மக்கள் ‘வழி’ தவறிவிட்டார்கள்: கோத்தா விசனம்!





யுத்தம் நிறைவுற்று ஐந்து வருடங்களுக்குள்ளேயே அதன் பெறுமதியை மறந்து போன மக்கள் வழி தவறிச்சென்றதன் விளைவே இன்று போர் வீரர்கள் மீது குற்றச்சாட்டுகளும், விசாரணைகளும் உருவாகும் நிலையைத் தோற்றுவித்துள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.

அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி மக்கள் வழிதவறியதாகவும் தெரிவித்துள்ள அவர் சிறுபான்மை மக்கள் வாக்களிக்காததனாலேயே மஹிந்த தோற்றார் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் அதை விட பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கத் தவறியதே தமது சகோதரன் தோல்வியுறக் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW