முன்னாள் அமைச்சர் பஷில் எச்சரிக்கை.!
ஒற்றையாட்சிக்கு எந்த வகையிலாவது பாதிப்பு ஏற்படுத்த முனைவின் அதற்கெதிராக செயற்பட்டு அதனை தடுத்து நிறுத்துவோம். எனவே அவ்வாறான செயற்பாடு இடம்பெறும்போது எமது நடவடிக்கைகளை கண்டுகொள்ள முடியும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.