கந்தளாய் அக்போபுர பகுதியில் கடைகளை உடைக்கும் மூன்று திருடர்கள் கைது
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரே இரவில் இரண்டு கடைகளை உடைத்து பொருட்களை திருடிய மூவரை நேற்றிரவு (25) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த 20,23,மற்றும் 22 வயதுடைய மூவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் அக்போபுர பகுதியில் அமைந்துள்ள சில்லரைக் கடைகள் இரண்டினை ஒரே இரவில் உடைத்து அதில் இருந்த சீனி மூடைகள்,மாவு வகைகள், மீள் நிரப்பு அட்டைகள் இருபதாயிரம் ரூபாய் பணம் போன்றவற்றினை வெள்ளிக்கிழமை (24) இரவு திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்ததற்கமைய சந்தேக நபர்களை நேற்றிரவு (25) கைது செய்துள்ளதாகவும் நாளை(27) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.