கிண்ணியா தள வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கூறி கவணயீர்ப்பு போராட்டம்-அரசியல் வாதிகள் நால்வர் பங்கெடுப்பு

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரல் வைத்தியசாலை தரமுயர்த்தப்படல் உள்ளிட்ட வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்திசெய்யக்கூறி தற்போது கிண்ணியாவில் கவணயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுகொண்டிருக்கின்றன.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.
நோயாளர்களை பராமரிக்க முடியாத நிலையில் உள்ள கிண்ணியா தள வைத்தியசாலை அவசரமாக தரமுயர்த்தப்பட வேண்டும்.
கிண்ணியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளிட்ட குழுவினரிடம் கிண்ணியா சூறா சபை இது தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளது.
80,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் கிண்ணியாப் பிரதேசத்தின் இந்த நிலையில் கிண்ணியா பிரதேசத்தின் சுகாதார நிலைகளை மேம்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
கிண்ணியா தள வைத்தியசாலையும் கிண்ணியா நகரின் தேவைக்கேற்ப விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தார். கிண்ணியா தள வைத்தியசாலை மூலம் சீனக்குடா, வெள்ளைமணல், கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், கப்பற்துறை என பல பிரதேசங்களையும் சேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெளி நோயாளர் பிரிவில் மாதாந்தம் 20,000 பேரளவில் சிகிச்சை பெறுகின்றனர். 160-180 குழந்தைகள் மாதமொன்றில் பிரசவிக்கப்படுகின்றனர். இத்தனை நோயாளர்களுக்கும் 132 கட்டில்களே வைத்தியசாலையில் இருக்கின்றன. 38 வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய இடத்தில் 17 பேர் மாத்திரமே அரசினால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரவேண்டும் வைத்தியசாலை தரமுயர்த்தப்படல் வேண்டி தற்போது மக்களால் கவணயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுகொண்டிருக்கின்றன




