மொசூலில் இரசாயன தாக்குதல்
ஐ.எஸ். பிடியிலிருந்து மொசூல் நகரை மீட்கும் இறுதிக் கட்ட சண்டை இடம்பெற்று வரும் நிலையில் முதன் முதலாக இரசாய தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
11 வயது சிறுவன் மற்றும் கைக்குழந்தையொன்று இரசாயன பாதிப்புள்ளாகி அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின் பின்னணியில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை மொசூலின் முக்கிய பகுதிகளை ஈராக்கிய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.