ஆற்றில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; பெண் பிள்ளை உட்பட இருவர் மாயம்
வெல்லவ, லுனுகடவெல்ல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று ஆற்றில் விழுந்ததால் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளது.
லுனுகடவெல்ல தெதுரு ஓயா சபத்து பாலத்தினூடாக முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதுடன், பெண்ணொருவர் உட்பட மேலும் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன முச்சக்கர வண்டி மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
