நாட்டுத் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி? யார் தேசப்பற்றாளர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது : சஜித் விளக்கம் முள்ளிநியூஸ்

நாட்டுத் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி? யார் தேசப்பற்றாளர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது : சஜித் விளக்கம்


நாட்டில் தற்போது அரசியல் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி? யார் தேசப்பற்றாளர்? என்ற போட்டி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் அரசாங்கத்துக்கு சொந்தமான 15ஆயிரத்துக்கும் அதிமான ஹெக்டேயர் நிலப்பரப்பை விற்பனை செய்தவர்களா அல்லது தற்போதைய ஆட்சியில் அரசாங்க நிலத்தில் மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பவர்களா தேசத்துரோகி? எனவும் கேள்வியெழுப்பினார்.

எனவே கடந்த ஆட்சியாளர்களுடன் எமது நல்லாட்சியை ஒப்பிடும் போது தேசத்துரோகி யார் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW