புகையிரதத்தில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.

பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும் புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் நேற்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே யாழ் அரியாலை கிழக்கு பகுதியை சேர்ந்த தவநாயகம் பிரேந்திரா (வயது-28) என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் அங்கு குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணிபுரிந்து வருகின்றவர் எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்