ஒரு கையொப்பம் மூலமாக மன்னார் - முசலி முஸ்லிம்களின் காணிகளை சுவீகரித்துள்ள ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் அமைச்சர் றிசாத் நேற்று (29) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து முறைப்பாடு செய்துள்ளார்.
றிசாத்தின் முறைப்பாட்டை செவிமடுத்த பிரதமர் ரணில், இன்று (30) ஆம் திகதி தான் ஜனாதிபதி மைத்திரிபாலாவை சந்தித்து அதுதொடர்பில் விளக்கம் கோருவதாக வாக்குறுதி வழங்கியதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைத்தது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW