கொலைகாரர்களைக் காப்பாற்ற முடியாது: மைத்ரி முள்ளிநியூஸ்

கொலைகாரர்களைக் காப்பாற்ற முடியாது: மைத்ரி



விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராகப் போராடிய அனைத்து பாதுகாப்புப் படையினர், அதிகாரிகளுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளதாக தெரிவிததுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஊடகவியலாளர்களைக் கடத்திக் கொலை செய்தவர்களைத் தன்னால் காப்பாற் முடியாது என தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்போடு தொடர்பில்லாத விடயங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரைத் தன்னால் காப்பாற்ற முடியாது என வும் மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி போர் வீரர்களுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் உருவாவதற்குத் தான் இடமளிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டும் எனும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கும் இலங்கை இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW