கொழும்பு- குருநாகல் வீதியில் அதிகாலை அனர்த்தம். 26 வயது தந்தை - மகள் உட்பட மூவர் உயிரிழப்பு. முள்ளிநியூஸ்

கொழும்பு- குருநாகல் வீதியில் அதிகாலை அனர்த்தம். 26 வயது தந்தை - மகள் உட்பட மூவர் உயிரிழப்பு.


கொழும்பு – குருணாகலை போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர்.

சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தை, ஒன்றரை வயதான பெண் குழந்தை மற்றும் பெண்ணொருவரும் பலியாகினர்.

விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு பெண் குருணாகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 26 வயது தந்தையும் 18 மாத குழந்தையும் பெண்
ஒருவருமே பலியாகி உள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW