கண்டி பூஜாபிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்து.. ஒருவர் பலி. முள்ளிநியூஸ்

கண்டி பூஜாபிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்து.. ஒருவர் பலி.


(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பூஜாபிட்டிய வீதியில் அம்பதென்னை முல்லேகம பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூஜாபிட்டிய பொலீஸார் தெரிவித்தனர்.

நேற்று 02 ம் திகதி மாலை வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிலில் வந்தவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி பேராதனை வைத்திய சாலையில் அனுமித்த போதும் அங்கு சிகிற்சை பயனின்றி இன்று 03 ம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் டப்லிவ்.எம். விஜேரத்ன என்ற 62 வயதுடையவராவார்.

இவ் விபத்து தொடர்பாக வேனின் சாரதியை பொலீஸார’ கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூஜாபிட்டிய பொலீஸார் நடாத்துகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW