கணவரை கொலை செய்து வீட்டுக்கு அருகில் புதைத்த மனைவி விசாரணையில் சிக்கினார்.

குடிபோதையில் தன்னை தாக்குவதன் காரணமாக தனது கணவரை கொலை செய்து வீட்டுக்கு அருகில் பெண்ணொருவர் புதைத்துள்ளார்.
திஸ்ஸமஹாராம – உத்தரகண்டிய பிரதேசத்திலயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் கணவர் காணாமல் போயுள்ளதாக காவற்துறையில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் குறித்த பெண்ணின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.