இறக்காமம்: பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை: ஞானசார!
இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் எந்தவொரு பிரிவினருடனும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லையெனவும் அங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் மீண்டும் களமிறங்கியுள்ள பயங்கரவாதி ஞானசார.
புராதன நிலங்கள் அங்குள்ளவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் வைத்து தெரிவித்துள்ள ஞானசார, இவை தொடர்பில் யாருடனும் பேச்சுவார்த்தை அவசியமில்லையென தெரிவித்துள்ளார்.
சில மாதங்களாக நீடித்து வரும் குறித்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அதிகாரத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோ, முஸ்லிம் – தமிழ் அரசியல் பிரதிநிதிகளோ தீர்க்கமான செயற்பாடின்றி இருப்பதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன் அறிக்கை மற்றும் சபை விவாத மட்டத்தில் இவ்விவகாரம் காணப்படுகிறது.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் ஞானசார அங்கு சென்றுள்ளமையும் வெளிநாட்டில் வசிக்கும் ஞானசார அவ்வப்போது இவ்வாறான விவகாரங்களுக்காக நாடு திரும்பிக் குரல் கொடுப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.