பட்டதாரிகள் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு!! முள்ளிநியூஸ்

பட்டதாரிகள் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு!!


தொழில் உரிமை கோரி சாத்தியகிரக போராட்டத்தில் குதித்துள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று 25 காலை 10 மணியளவில் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் கிழக்கு மாகாண சபையில் அமர்வொன்று இடம்பெறவுள்ளதால் அதை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சத்தியாகிரக போராட்டம் ஆரம்பித்து இரு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் ஒன்றிணைத்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW