பென்தொட்ட: பஸ்-லொறி மோதல்; 15 பேர் காயம்
பென்தொட்ட, காலி – கொழும்பு வீதியில் பேருந்து – லொறி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் பென்தொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை வேகக் கட்டுப்பாட்டையிழந்த லொறியே பஸ்ஸுடன் மோதியதாக சாட்சிகளை ஆதாரங்காட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.