மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் தீக்குளித்து தற்கொலை..!
மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காலி அக்மீமன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கூறிய ஆயுதத்தால் தாக்கியுள்ள கணவர், பயத்தில் தன்னை தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கணவன் மனைவி இருவருவரும் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.