சூழல் சோதனை நடவடிக்கைகளில் 1500 குழுக்களை ஈடுபடுத்த திட்டம் முள்ளிநியூஸ்

சூழல் சோதனை நடவடிக்கைகளில் 1500 குழுக்களை ஈடுபடுத்த திட்டம்


நாட்டில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக 1500 குழுக்களை ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டார்.

வெசாக் பண்டிகை காலத்தில் சேர்கின்ற உக்கிப் போகாத பொலித்தீன் உள்ளிட்ட பொருட்களை அகற்றுவதற்கும் இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW