வெசக்: 550 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

ஐ.நா வெசக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த 550 பேருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்தவர்களே இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.