அச்சமூட்டும் துருப்புச் சீட்டு ஞானதேரர்! முள்ளிநியூஸ்

அச்சமூட்டும் துருப்புச் சீட்டு ஞானதேரர்!


நமது சமூகம் றமழானை காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுபலசேனாவின் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.ஐநாடுகள் சபையின் சிறுபான்மையினருக்கான குழுவிடம் இவர்கள் தொடர்பில் 2015ல் விரிவான அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பித்தேன்.சில காரணங்களுக்காக முழுமையாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக சிலவிடயங்களை அறிந்திருப்பது அவசியமாகும்.
இவர்களின் ஆரம்பம் நேர்வே அரசாங்கத்தால் April 2011 -Arne Fjorto என்கின்ற Worldview International Foundation பிரதிநிதின் வழிகாட்டலில் Norwegian Ambassador for Sri Lanka Ms. Grete Løchen இலங்கையில் “Ven. Galegodatte Gnanasera Thero வை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வாழ்கின்ற இடம்பெயர் தமிழ்அமைப்புகளுடன் தொடர்பு ஆரம்பமானது.
இதன் அடுத்தகட்ட நகர்வாக நல்லிணக்க மகாநாடு Norway இல் from 20-26 October, 2011ல் NOREF.”என்ற அமைப்பின் முழுஅனுசரணையுடன் நடந்தேறியது.
இதன் பின்னர் நாட்டுக்குல் மிக குறைந்தளவில் செயற்பட்டனர். பின்னர் கோதபயாவின் அறிமுகம்??? எதேச்சையாக ஆரப்பாட்டம் நடாத்தவும் சில முக்கியமான நேர்வே தமிழ்அமைப்புகளுடன் தொடர்பை கோதபயாவிற்கு இவர்கள் உதவினர்.இதன்மூலம் கோதபயாவின் அதிகாரத்திற்குள் பங்காளர்களானர்.
சோதபயா தனது பல்வேறு செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க இவர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது.ஆரப்பாட்டம் நடாத்துவது முதல் அச்சுறுத்தல் விடுத்தல் வரை சகலரையும் கோதபயா அடக்கிவைத்தார்.
இவர்கள் கோதபயா மட்டுமல்ல தமிழ்,முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகள் இவர்களின் பல செயற்பாடுகளுக்கு உடந்தையாக உள்ளது கவலைக்குறியதாகும்.
இலங்கை வரலாற்றில் ஒவ்வொரு காலத்திற்கும் ராவய,சிங்கள பல மற்றும் உருமய என பல்வேறு அமைப்புகள் நாட்டில் உருவாகாமல் இல்லை.இருந்தும் பொதுபலசேன மட்டும் நீண்டகால ஆயுள் உடையதாக உள்ளது.இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக உள்ளது.
1)இந்த ஞானதேரவிற்கு அரசியல் ஆசை இல்லை.மாறாக அரசியல்வாதிகளுக்கு தேவைக்கேற்ப நாட்டில் பதற்றத்தை உருவாக்குவார்.பின்னர் அமைதியாவார்.
2)இவருக்கு எதிராக பலர் பேசலாம்.ஆனால் இவரிடம் சகல தலமைகளின் கூட்டு வியாபாரம் உள்ளது.இதனால் இவருக்கான பாதுகாப்பு உத்தரவாதம்.
இவருக்கு பதற்றத்தை ஏற்படுத்த கட்டளை இடுவதும்.பின்னர் அமைதியாக இருக்க கட்டளை இடுவதும் அரசியல் தலமைகளே.இந்த கூட்டு சூழ்ச்சி வியாபாரத்தை அறியாமல் சிலர் வீரவசனம்பேசுவதும்,அறிக்கை விடுவதும் கேலிக்கையாக உள்ளது.
கடந்த மஹிந்த அரசாங்கத்தை இந்த தேரரை வைத்தே மக்கள் விரட்டி அடித்தனர்.ஆனால் இவருக்கு எதிராகப் பேசிய சகல அரசியல் தலமைகளும் நல்லாட்சியில் அதிகாரத்தில் இருந்தும் தேரரின் ஆட்டம் அடங்கவில்லை.
தற்போதைய நல்லாட்சியில் மைதிரி மற்றும் ரணல் என இரண்டுபக்கமும் செல்வாக்கு அதிகரித்துள்ளது.மஹிந்த அரசில் கோதபயா ஆசீர்வாதம் மட்டுமே இருந்தது.ஆனால் தற்போதைய கூட்டுகட்சி ஆட்சியில் தயாகமகே,விஜயதாஷ,சம்பிக்க எனசுமார் 10கு மேற்பட்ட அமைச்சர்களின் ஆசீர்வாதம் உள்ளவராக மாறியுள்ளார்.
நல்லாட்சியில் இவரின் நிகழ்ச்சி நிரல்:;;
1-தற்போதைய அரசாங்கம் வடமாகாண முஸ்லீம்களின் வில்பத்துகாணிப் பிரச்சனையில் இவரை களத்தில் இறக்கி சதுரங்க ஆட்டம் ஆடியது.
2-தமிழ்தேசியக் கூட்டமைப்பினரின் குரல்வலையை மட்டக்களப்புக்கு அனுப்பி அடக்கியது.
3-முக்கிய முஸ்லீம் தலமைகளுடன் நேரடியாக இல்லாமல் வேறுமுறையில் தொடர்பை வெளிநாட்டில் உருவாக்கி கொடுத்துள்ளது.எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் இவரின் செயற்பாடு முஸ்லீம்களை தமிழ்தேசியக் கூட்டனிக்கு எதிராக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
4-தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அதிகாரப் பகிர்வை இழுத்தடிக்க இவரை தற்போது களத்தில் இறங்க வைத்துள்ளனர்.

5-அதேநேரம் தற்போதைய நல்லாட்சியை ஆர்ப்பாட்டம் மற்றும் நெருக்குதல்களால் முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதயகம்பன்வில போன்றவர்கள் இன்னொரு நிகழ்ச்சியையும் வழங்கியுள்ளனர்.

இந்த தேரோவை வைத்து நல்ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று கூட்டு எதிர்க்கட்சியும்,,சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை இழுத்தடித்து,சிறுபான்மை தலைவர்களை கொத்தடிமையாக்க நல்லாட்சியில் சிலரும் பங்குபோட்டு விளையாடுகின்றனர்.

இதுதவிர பல்வேறு விடயங்களை எழுதுவதை தவிர்த்துள்ளேன்.இருந்தும் இந்த ஞானதேரர் தனக்கு சிங்கள மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பது நன்கு தெறியும்.இருந்தும் காலத்துக்கு காலம் அரசியல்வாதிகளின நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி ஊடகங்களில் பிரபல்யமும் செல்வாக்கான வாழ்க்கையும் கிடைக்கிறது.எந்த அரசியல்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேவைப்பட்ட ஒருவராக மாறியுள்ளார்.இதன்மூலம் அரசியல்நடாத்துவதைவிட இவர் ஆர்ப்பாட்டமும்,செய்தியாளர் மகாநாடும்,நடைபவனமும் மூலம் அடிக்கடி வந்து போகின்றார்.ஆனால் நிதர்சனமான உண்மை யாதெனில் இவர் ஒவ்வொரு முறை வெளியாகின்ற போது ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலுக்கான செயற்தாடாகவே இருக்கும்.ஆனால் நமது மக்கள் வெறுமனே கோஷமிட்டு காலத்தை வீணடிக்கின்றனர்.

ஆகவே இவருக்கு எதிரான கருத்துக்களை முகநூளிலும் ,செயற்பாடுகளிலும் நமது சமூகம் அதிகமாக வெளியிடுவதைக் காணலாம்.ஆனால் நமது முஸ்லீம் சமூகம் சிங்களமக்களுடன் நெருக்கமான உறவுகளை வைத்துள்ளனர்.இந்த உறவை சீர்குழைத்து முஸ்லீம்களை அரசியல் அநாதைகளாகவும் ,எதுவித சலுகைகள் அற்றவர்களாகவும் மாற்றுவதற்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சதிகளின் கூட்டே இந்த தேரவின் ஆரம்பமும் நிகழ்காலமுமாகும்.
இருந்தும் பின்வரும் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காதவரை,நமது அடுத்த தலமுறைக்கும் இந்த தேரரர் கதை முடிவில்லா ஒன்றுதான்.

1)இந்த தேரோவினால் மஹிந்த தோற்றதாககூறிய சந்திரிக்கா,ரணில்,ராஜித்த மற்றும் மைதிரி ஆகியவர்கள் வேடிக்கை பார்ப்பது ஏன்?
2)கடந்த ஆட்சியில் இவரை கடுமையாக விமர்சித்த ரஞ்சன் ராமநாயக்க,சஜித் பிரேமதாஷ,சுஜீவ மற்றும் அர்ஜுன போன்ற அமைச்சர்கள் வாய்மூடிகளாக இருப்பது ஏன்?

3)மஹிந்த இவரை ஆதரித்தமைக்காகவே தாம் கட்சிமாறி ஆட்சியை மாற்பியதாக கூறும் முஸ்லீம் தலைகள் உற்பட 21 உறுப்பினர்களும் மௌனம் காப்பது ஏன்.இவர்களால் இவருக்கு எதிராக தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்காதது ஏன்?
4)பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்தேசியக்கூட்டனி,மட்டக்களப்பு மதுதான உற்பத்திக்கு எதிரான பராட்டத்திற்கு மட்டும் நல்லுறவை பேசுகிறது.ஞானதேர விடயத்தில் பொட்டிப் பாம்பாக உள்ளது.
5)கோதபயாவும் இல்லை,மஹிந்த அரசும் இல்லை.யாரின்மீது பழியைப் போடுவது???
ஆகவே படித்த, முற்போக்குள்ள முஸ்லீம் இளைஞர்கள் மற்றும் உலமாக்கள் மிகவும் நிதானமாக சிந்டிக்க வேண்டும்.நமது சமூகத்தை பிரச்சனைக்கு உரியவராக தொடர்ந்து வைத்திருப்பதற்கான சூழ்ச்சியே இது. அன்று ஆட்சி மாற்றத்திற்கு விடுதலைப் புலிகளை பயன்படுத்தியது போல,இன்று ஞானதேரோவை வைத்து அரசியல் தலமைகள் சதுரங்க ஆட்டம் விளையாடுகிறது.ஆதலால் சிங்கள மக்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்த உண்மையை அறியாமல் இல்லை.
நமது சமூகம் இந்த ஞானதேரவின் சீசனுக்கு மட்டும் விடுமுறையாக வந்து போகும் மிலேச்சத்தனத்தை பக்குவமாகக் கையாளவேண்டும்.நமது தலமைகளுக்கும் இனவாதத்தை இலகுவில் உருவாக்கவும்,வாக்குப்பலத்தை அதிகரிக்கவும் ஞானதேரர் தேவையாகவே உள்ளார்.

குறிப்பு:மேலதிக விபரங்கள் தேவையானவர்கள் தொடர்புகள் கொள்ளலாம்.
நன்றி:-
Fahmy Mohideen
Solicitor and Political Researcher
Tel:00447870763570
Email:mbmfahmy@yahoo.com
Facebook: Fahmy Mohamed
Twitter:Fahmy Mohamed 06
Linkedln: Fahmy MB Mohamed



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW