வாளுடன் வந்த ரவுடிகளால் யாழ்.நகரில் -பதற்றம்

யாழ்ப்பாண நகர் ஸ்ரான்லி வீதியில் நேற்று மு.ப. 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர், இளைஞன் ஒருவரைத் துரத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. வாளுடன் வந்த இருவரும் நகரில் சாதாரணமாக நடமாடினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. எனினும் பொலிஸார் குறித்த பகுதிக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
சினிமாப் பாணியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் ஸ்ரான்லி வீதியால் பயணித்தவர்கள் பதற்றமடைந்தனர்.