குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (21)அதிகாலை 03:30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளதாகவும் தெறிவித்துள்ளனர்.
ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலினால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இடம் பெரவில்லை எனவும், பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெறிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரனையை பொலிஸார் மேற்க் கொண்டுவருகின்றனர்.


