பொன்சேகாவின் தலைமையில் புதிய படையணி இல்லை: ரணில்
சரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய இராணுவ படையணியொன்று உருவாக்கப்படப் போவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அவ்வாறு எதையும் திட்டமிடவில்லையென தெரிவித்துள்ளார்.
முப்படையினரின் செயற்பாட்டையும் வலுவையும் அதிகரிப்பதற்கான செயற்திட்டங்களையன்றி வேறு எதையும் அரசாங்கம் செய்யவில்லையென நேற்றைய தினம் பாராளுமன்றில் வைத்து பிரதமர் தெரிவித்துள்ள அதேவேளை சரத் பொன்சேகா தலைமையில் விசே படையணி உருவாக்கி மஹிந்த இலக்கு வைக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியனர் பிரச்சாரம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.