கந்தளாய் மெதகம பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து-Dr.அருண சிறிசேன உடனடித் தீர்வு முள்ளிநியூஸ்

கந்தளாய் மெதகம பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து-Dr.அருண சிறிசேன உடனடித் தீர்வு


எதிர் பாராத விதமாக   ஏற்பட்ட தீவிபத்தில் கூரையின் சில பகுதிகள் மற்றும் அவர்களின் வீட்டுப் பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

 இச்சம்பவம் நேற்று  (04) வியாழக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் பாதிக்கப்பட்டவர் கந்தளாய்  மெதகம  பகுதியில்  வசித்து வந்த குடும்பத்தினர் ஆவர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளருமான Dr.அருண சிறிசேன அவர்களின் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியில் ஒன்றான தனது மாதாந்த சம்பளத்தை எமது மக்களின் சேவைக்காக பயன்படுதுவதாக கூறியதற்கமைவாக பாதிக்கப்பட்டவருக்கு உதவும் முகமாக தீயினால் சேதமடைந்த அவர்கள் வீட்டை மீள திருத்தம் செய்ய சீமெந்து மற்றும் சீட் உடனடியாக வழங்கி  வைக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

கந்தளாய் விசேட செய்தியாளர்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW