காத்தான்குடியில் 14 வயது சிறுவனை தென்னைமரத்தில் ஏற்றிய நபர் கைது..! முள்ளிநியூஸ்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை தென்னைமரத்தில் ஏற்றிய நபர் கைது..!


காத்தான்குடியில் 15 அடி உயரமான தென்னை மரத்தில் இளநீர் பறிப்பதற்காக ஏறிய 14வயது சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசபலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனை மரத்தில் ஏற்றிய நபர் காத்ததன்குடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள வீடொன்றிலுள்ள தென்னை மரத்தில் அப்துல் அசீஸ் சரீக் என்ற 14 வயது சிறுவனை தம்பிலெப்பை வசீக் என்ற விட்டு உரிமையாளர் இளநீர் பறித்துத் தருமாறு ஏற்றிய சமயமே சிறுவன் மரத்திலிருந்து கீழே விழுந்து கைககள் உடைந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்hடவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW