கொழும்பு – துறைமுக நகரத்தால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளை அறிவித்தது சீனா.

இலங்கையின் நலன் பொருட்டே கொழும்பு – துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.
கொழும்பு கடல்பகுதியில் புதிய நிலத்தை உருவாக்கி, இந்த வேலைத்திட்டம் சீனாவின் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த வேலைத்திட்டம் 2030ம் ஆண்டு நிறைவடையும்.
இதன் கீழ் 80 ஆயிரம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1.4 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டமே சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய வேலைத்திட்டமாகும்.
இதன் ஊடாக இலங்கைக்கே பாரிய நன்மைகள் ஏற்படும் என்று சீனா அறிவித்துள்ளது.