திருகோணமலை, மட்கோ கடலில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு முள்ளிநியூஸ்

திருகோணமலை, மட்கோ கடலில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Image result for நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருகோணமலை, மட்கோ கடலில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்கோ, முஹம்மதிய்யா நகரைச் சேர்ந்த டி.எப்.சர்பான் (வயது 16) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

தனது நண்பர்களுடன் இன்று முற்பகல் இச்சிறுவன் நீராடிக்கொண்டிருந்ததாகவும் அதன்போது, இச்சிறுவனும் அவரது நண்பர் ஒருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இருப்பினும், அவரது நண்பர் காப்பாற்றப்பட்ட அதேவேளை, இச்சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனதாகவும் பொலிஸார் கூறினர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW