இயற்கை அனர்த்தம்; சமூக ஒற்றுமையைப் போற்றும் சந்திரிக்கா! முள்ளிநியூஸ்

இயற்கை அனர்த்தம்; சமூக ஒற்றுமையைப் போற்றும் சந்திரிக்கா!


இயற்கை அனர்த்தங்களின் பின்னணியில் இலங்கையின் அனைத்து சமூகங்களும் ஒருவருக்கொருவர் பகைமை மறந்து ஒற்றுமையுடன் பரஸ்பரம் உதவிகள் புரிந்து செயற்பட்டமையை மெச்சியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.

இன – மத பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் ஒரு தாயின் குழந்தைகளாக ஒன்றிணைந்தமை குறித்து தனது திருப்தியை வெளியிட்டுள்ள சந்திரிக்கா பொலிசார் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பொலிசாரால் தேடப்பட்டு வரும் ஞானசாரவும் ஒலிப்பதிவு மூலம் ‘ஒற்றுமை’ பற்றிப் பேசியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW