44 நாடுகளிலிருந்து நிவாரண உதவி! முள்ளிநியூஸ்

44 நாடுகளிலிருந்து நிவாரண உதவி!



இயற்கை அனர்த்த பாதிப்புகளையடுத்து 44 நாடுகள் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சாகல ரத்நாயக்க.

நேற்றைய தினம் பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து நிவாரணம் வந்தடைந்த அதேவேளை சிங்கப்பூர் அவசர நிதியுதவியாக ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. ஏலவே இந்தியா இரு கப்பல்களில் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ள நிலையில் அமெரிக்க உட்பட 44 நாடுகள் வாக்குறுதியளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 30 நாடுகளின் உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW