சுன்னாகம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் படுகாயம் முள்ளிநியூஸ்

சுன்னாகம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் படுகாயம்


யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒட்டியாலடி பகுதி பிரதான வீதியில் கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றதுடன் பிரதான வீதியில் இருந்து சிறு வீதிக்கு திரும்பிய கூலர் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய இளைஞர்கள் மருதனார்மடம் -காங்கேசன்துறை வீதியில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு மோட்டார் சைக்கிளில் வித்தைகாட்டி மிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

அப்பகுதியில் உள்ள உடுவில் மற்றும் மருதனார்மடம் பாடசாலைகளைச்சேரந்த மாணவிகள் பாடசாலை விட்டுச்செல்லும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் சென்று துரத்திச் சென்றுள்ளனர்.

இதன் பொதே சிறுவீதி ஒன்றுக்குள் செல்ல முற்பட்ட கூலர் வாகனம் ஒன்றுடன் அம் மோட்டார் சைக்கிள்களில் ஒன்று வேக கட்டுப்பாட்டை மீறி விபத்திற்கு உள்ளானது.

அதில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் சுன்னாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW