நிந்தவூர்: லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் காயம் முள்ளிநியூஸ்

நிந்தவூர்: லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் காயம்


நிந்தவூரில் இன்று காலை 9 மணியளவில் லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மயக்க நிலையில் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உமர் கத்தாவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ள அதேவேளை அக்கறைப்பற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியுடனேயே மோட்டார் சைக்கிள் மோதியதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW